2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

திடீரென உயிரிழந்த காகங்கள்

Janu   / 2023 ஜூன் 08 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன. இதே வேளை சில காகங்கள் உடல் வலிமையில்லாமல் சோர்ந்த நிலையிலும் காணப்பட்டன.

குறித்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் வதியும் பொது மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு அதிகாரிகள் வருகைத் தந்து உயிரிழந்த காகங்களை பார்வையிட்டனர்.  காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு சென்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .