Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளத்தில் சில நாள்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாகத் தப்போவ, தெதுருஓயா மற்றும் ராஜாங்கனை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டதுடன், திங்கட்கிழமை (21) காலை மேலும் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் இதுவரையில் திறக்கப்பட்டுள்ளதுடன், 4 வான் கதவுகள் இரண்டரை அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்தார்.
அத்துடன், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதன்படி, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் தலா 2 வான் கதவுகள் வீதம்; 6, 4 மற்றும் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, கலாஓயா பெருக்கெடுத்தமையால், புத்தளம் மன்னார் வீதியின் பழைய எலுவங்குளம் சப்பாத்துப் பலத்தின் மேல் நேற்று திங்கட்கிழமை (21) காலை வரை 9 உயரத்தில் நீர் அதிக வேகத்துடன் மேவிப்பாய்வதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் மேலும் தெரிவித்தார்.இதனால், கடந்த கடந்த 14ஆம் திகதி முதல் புத்தளம் எலுவங்குளம் ஊடாக மன்னார் செல்லும் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .