Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Editorial / 2023 ஜூலை 17 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்ததாக கூறப்பட்ட நான்கு மாதங்களேயான பெண் சிசு, ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ. எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். .
நான்கு மாதங்களில் வழங்கப்படவேண்டிய தடுப்பூசி கடந்த 15ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மறுநாள் 16ஆம் திகதி சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக சிசுவின் தந்தை தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிசுவின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago