2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

தகாத உறவில் இருந்த பங்களாதேஷ் பிரஜை கைது

Editorial   / 2023 ஜூலை 27 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த  எட்டு வருடங்களாக விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 38 வயதான நபரை மாரவில பொலிஸ் அதிகாரிகள் மெதகொட பிரதேசத்தில் வைத்து அண்மையில் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு பிரஜையொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே, அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸ் குழு அவரை கைது செய்துள்ளது.

கைது​ செய்யப்பட்ட சந்தேகநபர், தும்பலசூரிய பிரதேசத்தில் வாழும் இலங்கை பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நபர், சுற்றுலா விசாவில் 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டுள்ள மாரவில பொலிஸார், மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .