Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 29 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில், சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர், கடந்த 26ஆம் திகதி உயிரிழந்துள்ளாரென, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், மெல்புர முதலாம் ஒழுங்கையில் வசிக்கும் அசேரா சஹனி புன்ர்ஜன (வயது 9) என்ற சிறுமியே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சிறுமி, சிலாபம் சென் மேரிஸ் பெண்கள் கனிஷ்ட பாடசாலையில் 4ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளதோடு, சிறுமியின் பெற்றோர், இத்தாலியில் தொழில் புரிந்து வந்துள்ளமையால், தனது தந்தையின் சகோதரரின் வீட்டில், சிறுமி தங்கியிருந்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், இச்சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, பின்னர் சுகமடைந்திருந்துள்ளார்.
தொடர்ந்து 21ஆம் திகதி மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோடு, இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, டெங்குக் காய்ச்சலால் சிறுமி பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து.
இதனையடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்ததாக, சிறுமியின் சித்தப்பா தெரிவித்தார்.
இந்நிலையில், சிறுமி, ஆபத்தான நிலையில், கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 26ஆம் திகதி மாற்றப்பட்ட பின்னர், அங்கு வைத்து உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago