2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

டெங்குவால் சிறுமி பலி

Princiya Dixci   / 2017 மே 10 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த 12 வயதுடைய சிறுமியொருவர், சிகிச்சை பலனின்றி, செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளாரென, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் - குருநாகல் வீதியில் அமைந்துள்ள மெல்புர பிரதேசத்தைச் சேர்ந்த, நெலீ ஒலிவியா பிரான்சிஸ் எனும் சிறுமியே, இவ்வாறு உயிரி​ழந்தவராவார்.

கடந்த சனிக்கிழமை, இம்மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில், சிலாபம் வைத்தியசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அச்சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால், அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் கடந்த திங்கட்கிழமை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே, சிறுமி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலாபம் வைத்தியசாலையில், திங்கட்கிழமை பகல் வரையில் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 49 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுள் 19 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், சிலாபம் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அநுருத்த ஜாகொட தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .