2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

ஜெனரல் மற்றும் ஆளுநருக்கிடையில் சந்திப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் நீதித்துறை அதிகார எல்லைக்கு உட்பட்டவாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவின் கவுன்சிலர் ஜெனரல் ஹர்விந்தர் சிங் (Harvinder Singh) மற்றும், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோருக்கிடையில்சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை(13) ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊவா மாகாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டது.

இந்சந்திப்பில் ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளர் தமயந்தி பரணகம மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .