Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 23 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பில் ௯டிய கவனம் செலுத்தப்படும் என, புத்தளம் பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நில்மினி ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிறுவர் மற்றும் மகளிர் உரிமைகளை பாதுகாத்து உறுதிப்படுத்துகின்ற மனித விழுமியங்களை மதிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில், புத்தளம் மாவட்ட செயலகம், ஸ்ரீ லங்கா பொலிஸ் என்பனவற்றின் இணை ஏற்பாட்டில், சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சால், குறித்த அலுவலகம், பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் திறந்துவைக்கப்பட்டுள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் மூலம் சிறுவர்கள், மகளிருக்காக சட்ட ஆலோசனை வழங்குதல், மதியுரைச் சேவைகள் வழங்குதல், கட்டுப்பாட்டு தற்றும் தேவையான சேவைகளுக்காக தொடர்புபடுத்தல், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் விரிசல்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் என்பன, குறித்த பணியகத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.
புத்தளம் பொலிஸ் பிரிவில் இவ்வாறான சேவைகள் தேவைப்படும் சிறுவர்கள் அல்லது பெண்கள் இருப்பின், உடனடியாக குறித்த பணியகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago