2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

சிரமதானப் பணி முன்னெடுப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை அழகுபடுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கற்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  கரம்பை 603 ஏ கிராம சேவகர் பிரிவில், நேற்று (08) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிராம உத்தியோகத்தர் நிசார் முஹம்மட் நௌபல் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில்,  கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பி.ஷாலக மதுசங்க, சமுர்த்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ராஜ், சிவில் பாதுகாப்பு குழு தலைவர் வி. இராசலிங்கம் உட்பட சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பள்ளி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் மாதர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

கற்பிட்டி - பாலாவி பிரதான வீதி கரம்பை சந்தி வீதியோரம் மற்றும் உள்வீதிகள் என்பன இதன்போது  துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X