2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

சாஹிராவிற்கு மாற்றுப்பாதை அமைக்க தீர்மானம்.

Freelancer   / 2023 ஜூன் 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் மாற்றுப்பாதை ஒன்றினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அண்மையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதான வாயில் ஊடாக பிள்ளைகள் பிரவேசிக்கும் போது ஏற்படும் அசெளகரியங்கள் காரணமாக அதன் பின்புற பகுதியில் பாதை ஒன்றை அமைத்து பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் ஏ.எம்.ஜவாத் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் இணைந்து புத்தளம் மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உரிய இடத்திற்கு புத்தளம் பிரதேச செயலாளரை வரவழைத்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாக பாதை அமைப்பதற்கான ஏற்படுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .