2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸ் தொடர்பில் தென் மாகாணத்தில் தெளிவூட்டல்

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகைதரும்  தென் மாகாணத்தில், கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில், மாகாணத்தின் சகல பிரிவுகளுக்கும் ​தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைப் பிரிவின் பணிப்பாளர் சந்திம சிறிமான்ன தெரிவித்தார்.

தென் மாகாணத்துக்கு சீன சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைதருவதுடன், கட்டட நிர்மாணப் பணிகளிலும் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போது விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைக்கமைய, சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள், கட்டட நிர்மாணங்களை மேற்கொள்ளும் பிரதானிகளுக்கு, விளக்கமளிக்க தென் மாகாண சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து, கடந்த இரண்டு வாரங்களில் நாட்டுக்கு வருகைதந்த அனைத்து நபர்கள் தொடர்பில் ஆராயுமாறும் அவர்களுக்கு காய்ச்சல் அல்லது ​வேறு நோய் அறிகுறிகள் காணப்படின் உடனடியாக அங்கொடை தொற்று நோய் பிரிவில் அனுமதிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைப் பிரிவின் பணிப்பாளர் சந்திம சிறிமான்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X