2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரம் இந்திய நிவாரணப் பொதிகள் வழங்கப்படும்

Editorial   / 2022 மே 26 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்  

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரம் குடும்பங்களுக்கான இந்திய நிவாரணப் பொதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்  திருமதி றூபவதி கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கென 20 ஆயிரம் பொதிகளை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அப் பொருட்கள்  கிடைக்கப்பெற்றதும் தெரிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இந் நிவாரணத்திற்கான பயனாளிகள் கிராமங்கள் தோறும் அங்கு பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பு அடங்கிய சுயாதீன குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவு செய்யப்படுகின்ற குடும்பங்கள் வறுமைக்குட்பட்ட மற்றும் உணவுத் தேவைக்குரிய குடும்பங்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .