Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 01 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்கா தலைமையிலான பிரதேச சபை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் டெங்கு ஒழிப்பு, கழிவு முகாமைத்துவம் மற்றும் பிரதேசத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தற்போது பிரதேச சபை பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் துறையினர், பொலிஸார், பிரதேச செயலக அதிகாரிகளின் பங்களிப்போடு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக வீடுகளை சோதனை செய்யும் நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இவ்வேலைத்திட்டங்களுக்கு அமைய, கரம்பை கிராம உத்தியோகத்தர் பிரிவில் கற்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் இரு ஓரங்களிலும் காணப்பட்ட பொலித்தீன் மற்றும் ப்ளாஸ்டிக் கழிவுகளைத் துப்புரவு செய்யும் பணிகள், நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச மக்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்பாட்டின் போது, வீதியின் இரு மருங்கும் முற்றாக சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டன.
வீதியோரங்களில் மரங்களை நடுதல், கற்பிட்டி வீதியின் நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் ஒன்றை நிர்மாணித்தல் போன்ற செயற்பாடுகளையும் செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்கா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
3 hours ago