2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கற்பிட்டியில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள்

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

கற்பிட்டிக்கு வருகைதரும் அதிகளவான சுற்றுலாப்  பயணிகள், கண்டக்குழி கலப்பில் kite Surfing எனப்படும் நீர்ச்சருக்கள் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இலங்கையில்  கற்பிட்டியில் மாத்திரமே kite Surfing  நீர்ச்சருக்கள் விளையாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நீர்ச்சருக்கள் விளையாட்டு சுமார் 10 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சருக்கள் (Kite Surfing) விளையாட்டில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையர்களே பயிற்சிகளை வழங்குகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்து காணப்பட்டாலும்,  தற்போது மீண்டும் சுற்றுலா துறையினர் படையெடுத்து வருகைத் தருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இலங்கையிலுள்ள இவ்வாறான சுற்றுளா மையங்களை மேம்படுத்துவதனூடாக,  தொழில் வாய்ப்பை அதிகரித்து அந்நியச் செலாவனியை ஈட்ட முடியும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .