Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 02 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்துக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கற்பிட்டி பிரதேச செயலகம், கற்பிட்டி பிராந்திய சுகாதாரப் பணிமனை அலுவலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன், கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில், குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் ஆர்.மங்கள ராமநாயக்கவின் தலைமையில், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலுமுள்ள கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கிராம மட்டங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் டெங்கு ஒழிப்பு குழுவினரின் ஒத்துழைப்புக்களுடன், கற்பிட்டி பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர்கள், கற்பிட்டி மற்றும் நுரைச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கற்பிட்டி பிரதேச சபை உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில், குறித்த டெங்கு ஒழிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சமுர்த்திப் பயனாளிகள் உட்பட பொதுமக்கள், இளைஞர் அமைப்புக்களும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
கற்பிட்டி பிரதேசத்தில் இருந்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு, அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன்,டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago