Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்,ஹிரன் பிரியங்கர
கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட, ஆனவாசல -ஜனசவிபுர கிராமத்தில், தமது பிள்ளைகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த அரச காணியை, தனியார் ஒருவருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமையை கண்டித்து, பிரதேச மக்கள் கற்பிட்டி பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பு கொடிகள், பதாதைகள் என்பவற்றை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கற்பிட்டி- ஆனவாசல ஜனசவிபுர கிராமத்தில், மக்கள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை குறித்த அரச காணியையே அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் ஆகியோர் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
எனினும், எவ்வித முன் அறிவித்தலும் இன்றி, மக்கள் குடியிருப்புடன் இணைந்த குறித்த அரச காணியை, சுற்றுலா ஹோட்டல் அமைப்பதற்காக புத்தளம் மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு ( LRC) தனியார் ஒருவருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கியுள்ளதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக்காலத்தில், 50 ஏக்கர் திட்டத்தின் கீழ் குறித்த அரச காணி உள்வாங்கப்பட்டு அவை மக்கள் குடியிருப்புக்காக பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எம்.இன்பாஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனோக் துஷார பதிரகே, கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் உறுப்பினர்கள், கத்தோலிக்க மதகுரு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாக, கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், காணி அமைச்சர், மாகாண ஆளுநர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தி நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதாகவும், இந்த காணி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் இந்த பிரச்சினையை சட்டரீதியாகவே அணுக வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago