2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கணிதம் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்

Editorial   / 2024 ஜூலை 18 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தர மாணவர்களுக்கு சிக்கலான கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பாடசாலைக்கு சமுகமளிக்காது,  உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்றக் குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர்   எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்.  இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர், அநுராதபுரம் பாடசாலையொன்றில் கற்பிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆசிரியர்,  பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளில் பணத்திற்காக கற்பிப்பதாக பெற்றோர்கள் குழுவொன்று மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

அந்த முறைப்பாட்டின் பேரில், மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஏனைய பணியாளர்கள் குழுவுடன் இணைந்து பாடசாலையை ஆய்வு செய்த போது, ​​இந்த ஆசிரியர், பாடசாலைக்குச் சென்று, ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, பாடசாலைக்கு வெளியே சென்று பிரத்தியேக வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்ததைக் கண்டுபிடித்தனர்.  

இவ்வருடத்தில் இதுவரையிலும்  எவ்வித அதிகார சபையின் அங்கீகாரமும் இன்றி இந்த ஆசிரியர் 26 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த ஆசிரியரை மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன், புதன்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X