2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கடலுக்குக் குளிக்கச் சென்றவர் மாயம்

Thipaan   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

வென்னப்புவ, போலவத்தை கம்மல பிரதேச கடலில் குளிப்பதற்காகச் சென்ற இளைஞர்களுள் ஒருவர், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (07) மாலை கடலில் குளிக்கச் சென்ற கொஸ்வத்தை போத்தலேகம பிரதேசத்தைச் சேர்ந்த சானக இசுறு ராஜபக்ஷ (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்த இளைஞர் இரு தினங்களுக்கு விடுமுறை பெற்றுக் கொண்டு தனது நண்பர்களுடன் கடலில் குளிப்பதற்கு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளது. 

நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கையில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்பதற்காக பிரதேச மக்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சி பலனளிக்கவில்லை என்றும் இதனால் கடற்படையினரின் உதவியைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .