Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுப் பிரதேசத்திலுள்ள ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயத்தில், சட்ட விரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தைச் சுற்றி வளைத்து, அங்கிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றையடுத்தே பொலிஸ் குழுவினர் இவ்வாறு இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளர்.
மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு தயாரிக்கும் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட 250 போத்தல் கசிப்பு, கோடா அடங்கிய 16 பரல்கள், ஐந்து வாயு சிலிண்டர்கள், இரண்டு வாயு அடுப்புக்கள், மோட்டார் சைக்கிள், 150 கிலோ கிராம் சீனி மற்றும் நான்கு கசிப்பு வடி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் அவ்விடத்தைச் முற்றுகையிட்ட போது அங்கிருந்தவர்கள், தப்பிச் சென்றுள்ளனர் என்றும் தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ள முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025