2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஜீப் சாரதி கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

ஜீப் ஒன்றை மடக்கிப் பிடித்துள்ள புத்தளம் விசேட அதிரடிப்படயினர், அந்த ஜீப்பிலிருந்து ஏழு கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதுடன், சாரதியையும் கைதுசெய்துள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டை ஸ்ரீமாபுறம் பிரதேசத்தில் வைத்தே, முந்தல் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை இரவு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடுப் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவதே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேசநபரை, மேலதிக நடவடிக்கைகளுக்காக முந்தல் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .