2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிராமிய வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2017 மார்ச் 03 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்டத்திலுள்ள கிராமிய வைத்தியசாலைகள்,  சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சுமார் 70 மில்லியன் ரூபாயை, சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் வழங்கியுள்ளதாக,  வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.

இந்நிதியில், முந்தல் பிரதேச செயளாளர் பிரிவின் புழுதிவயல் வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபாயும், கரைத்தீவு வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபாயும், பாலாவி நாகவில்லு வைத்தியசாலைக்கு 30 மில்லியன் ரூபாயும் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  அவர்  தெரிவித்தார்.

இந்நிதி ஒதுக்கீடு தொடர்பான கலந்துரையாடலொன்று,  புதன்கிழமை (01) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கிராமிய வைத்தியசாலைகளை தரமுயர்த்தல் கருத்திட்டத்திட்டத்துக்கு அமைவாக, இந்நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .