Editorial / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.மகாதேவன்
இன்று நாம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஓசோன் படலம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதை நாங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். இதன் நிமித்தமே எமது ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளில் கண்டல் மர தாவரங்களை நாடு பூராகவும் நாம் நட்டு வருகின்றோம் என்று, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் ஆளுநர் அநுராதா ஜயரத்ன தெரிவித்தார்.
கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு, நேற்று (18) கல்பிட்டி -கண்டக்குளிய பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் காலை ஓசோன் பிரிவின் பணிப்பாளர் ஜானக குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர் புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, கல்வி அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது கல்பிட்டி அல்அக்ஸா பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் 18 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், 2ஆயிரம் கண்டல் தாவரம் 850 மாணவர்களால் நடப்பட்டது.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“சுற்றாடல் அமைச்சு கடந்த காலங்களில் சுற்றாடல் அமைச்சுடன் சேர்ந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளது. நாங்கள் அதிகம் போகின்ற கல்பிட்டி பிரதேசங்களுடைய சுற்றுலாப் பகுதிகளையும் கடல்கரையையும் பிரபல்யப்படுத்துவதும் பாதுகாப்பதும் முக்கியமானதாகும். இந்த வேலைத்திட்டத்தை, ஒரு நாளில் செய்வது என்பது பொருத்தமானதல்ல. இதற்கு இன்று உதாரணமாக அமைவது மொன்ரிய நிறுவனமாகும்.
“உலக நாடுகள் பல சேர்ந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தை மேற்கொள்ளும் போது எமது நாட்டின் பங்களிப்பு 0.1 சதவீதம் காணப்படுகின்றது. இவ்வாறு செய்யும் போது ஓசோன் படைக்கு ஏற்படும் தீமைகள் 98 சதவீதத்தால் குறைக்க முடிந்துள்ளது. நாங்கள் ஒருவர் இருவர் மட்டுமல்லாது சகலரும் இணைந்து செயற்படும் போது, எமது இலக்கை நாம் அடைய முடியும்.
“2030ஆம் ஆண்டளவில் 20 மில்லியன் மக்களுக்கு ஏற்படக்கூடிய தோல் புற்றுநோயை எங்களால் நிறுத்திவிட முடியும். முப்பது வருடங்களுக்கு முன் ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கேற்றவாறு நாங்கள் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். தற்போது எமது சமுத்திரங்களில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் கருதுகையில், அது 80 மில்லியன்களாக கொண்டதாக அதிகம் காணப்படுகின்றது. இந்தக் கழிவுகளை கடலில் சேர்ப்பதை தவிர்த்து, எங்கள் எல்லோருக்கும் வழங்கப்படுகின்ற பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும். மூன்றில் இரண்டு நீர் வளத்தைக் கொண்ட இந்த பூமியிலில் இந்தக் கழிவுகள் மூலம் உயிரினங்களுக்கு ஏற்படுகின்ற தீமைகளை கணக்கெடுப்பதில் மட்டும் சென்று கொண்டிருப்பது அர்த்தமற்றதாகி விடும்.
“நாங்கள், எங்களுக்கு வழங்கப்படுகின்ற கடமைகளை நிறைவேற்ற வேண்டும். மில்லியன் கணக்கான டொன் குப்பைகள் கடலில் சேர்க்கப்படுவது சம்பந்தமாக கதைப்பதற்கு முன் நாம் எமது வீட்டுக்கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என சிந்திக்க வேண்டும். நாங்கள் சூழல் சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி கதைக்கின்றோமே ஒழிய நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றி சிந்திப்பதில்லை. நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன் கடலில் குப்பைகள் சேர்க்கும் நாடுகளின் வரிசையில், நாங்கள் ஐந்தாவது இடத்தில் உள்ளோம்.
“நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் கடமைகளை பொறுப்பேற்று செய்தால், எங்களால் நீண்ட துரம் பயனிக்க முடியும். இதற்கு மொன்டியன் நிறுவனம் சிறந்த உதாரணமாக திகழ்கின்றது. நாங்கள் பிரிந்து நின்றால் கடைசியில் தோல்வியை சந்திப்போம். எனவே நாங்கள் அனைவரும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை செய்வதன் மூலம் வெற்றியை அடைய முடியும்” என்றார்.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025