Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 07 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இந்திக குமார)
தம்புளை முதல் மாத்தளை வரையான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அனைத்திலும், எரிபொருள் முற்றாக தீர்ந்துள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதுடன், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையும் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று (06) பிற்பகல் முதல், குறித்த எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் முற்றாக தீர்ந்துள்ளதென, முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் இல்லாததால் பொதுமக்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கும் ஊழியர்களுக்கும் இடையில், நாவுலவில் நேற்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸாரின் தலையீட்டின் பின்னர், அம்முரண்பாடு தீர்க்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஒயில் கம்பயினியின் பெற்றோல் தொகுதியொன்று, தரம் குறைவானது என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை முழுவதிலும் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு, இப்பகுதிகளையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலைமை, எப்போது சரியாகுமெனத் தெரியவில்லை என, எரிபொருள் நிலைய முகாமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago