Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பீ.எம். முக்தார்
புனித மக்கா பைதுல் பாஸியில் வசிக்கும் ஷாதுலியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் (செய்கு ஸஜ்ஜாதா) சங்கைக்குரிய கலாநிதி அஷ்ஷெய்க் அஜ்வாத் அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அஷ்ஷாதுலியின் புதல்வர் சங்கைக்குரிய சட்டத்தரணி அஷ்ஷெய்க் முஹம்மத் பின் அஜ்வாத் அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அஷ்ஷாதுலி, 8 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் 04ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.
செப்டெம்பர் 04ஆம் திகதி கொழும்பு 12 எம்.ஜே.எம். லாபிர் மாவத்தையில் உள்ள உம்மு ஸாவியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பங்குபற்றுவதோடு, ஷாதுலிய்யா தரீக்காவை பின்பற்றும் முஸ்லிம்கள் வாழும் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக, உம்மு ஸாவியா பிரதம இமாமும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கதீபுமான கலீபதுல் குலபா மௌலவி அல்ஹாஜ் ஜே. அப்துல் ஹமீத் ஆலிம் (பஹ்ஜி) மற்றும் உம்மு ஸாவியா பரிபாலன சபைத் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் மக்கி ஹாஷிம் ஆகியோர் தெரிவித்தனர்.
கொழும்பு உம்மு ஸாவியா நிர்வாக சபையின் அழைப்பில் ஷாதுலியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் (செய்கு ஸஜ்ஜாதா) சங்கைக்குரிய கலாநிதி அஷ்ஷெய்க் அஜ்வாத் அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அஷ்ஷாதுலியின் உத்தரவுக்கமைய, அவரது புதல்வர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025