2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

உருக்குலைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

உடப்பு கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (04) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர்.

குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரனையை  மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .