Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக்காலங்களாக மாராவில, கொஸ்வத்தை, வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வீடுகளை உடைத்து, அங்கிருந்து பல பொருட்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களைத் திருடப்பட்ட பொருட்களுடன், நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுவில், சிரிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுகளையுடைய இருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும், பகல் வேளையில் பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்து, வீட்டார் வெளியில் சென்றிருக்கும் வீடுகளினுள் நுழைந்து அங்கிருந்த பொருட்களைத் திருடியுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றிருந்த நிலையில் தொலைக்காட்சி, சைக்கிள்கள் 2, கெசட் ரெகோடர், தண்ணீர் மோட்டர் போன்றவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதோடு, அன்றாடம் தேவையான போதைத்தூளை வாங்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே, இவ்வாறு திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபருக்கு எதிராக திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாத காரணத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது இது தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
17 minute ago