2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இளைஞர் சேவைகள் மன்றத்தால் வடமேலில் வேலைத்திட்டங்கள்

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மூலம் இவ்வருடத்தில் வடமேல் மாகாணத்தினுள் 63.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான 460 வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் உள்ள 30 பிரதேச செயலகப் பிரிவுகளில் 343 வேலைத்திட்டங்களும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் 117 வேலைத்திட்டங்களும் இவ்வாறு ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமேல் மாகாண பணிப்பாளர் டி. எல். நந்தசிரி தெரிவித்தார்.

இந்த ஒரு வேலைத்திட்டத்துக்காக ஒன்றரை இலட்சம் ரூபாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வழங்கப்படவுள்ளது. மூன்று இலட்சம் பெறுமதியுடைய மீகுதி வேலைகளை, வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தில் உள்ள இளைஞர் கழகத்தின் மூலமும் உடல் உழைப்பு பங்களிப்புக்கள் மூலம் செய்துகொள்ள வேண்டும்.

பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான தெரிவுகள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவின் ஊடாக இடம்பெறும். 

இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், வடமேல் மாகாணத்துக்கு 690 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்த நிதியைச் செலவு செய்யும் அப்பிரிவின் இளைஞர் சேவை அதிகாரியின் கண்காணிப்பில் அத்திட்டம் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் வடமேல் மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் டி. எல் நந்தசிரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .