Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூன் 22 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதன் முதலாக குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நடைமுறையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
DAIICHI LAIHTSO GROUP என்ற ஜப்பான் நிறுவனம், இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது.
இதன்படி மாகாண சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சேரும் குப்பைகள், இந்த மின்சாரத் தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல், கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது. இதற்கமைய குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள, சுந்தராபொல குப்பை கொட்டும் இடத்தைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
DAIICHI LAIHTSO GROUP நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஷமல் சேனரத் ஆகியோரைச் சந்தித்து, இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .