Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் லெகூன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு மாத காலப்பகுதிக்குள் இலங்கையின் 25 மாவட்டங்களையும் ஊடறுத்து சுமார் 2194 கி.மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்த இளைஞனுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் தில்லையடி சதாமியாபுரத்தை சேர்ந்தவரும் லெகூன் அமைப்பின் உறுப்பினருமான என்.எல்.எம். நப்ஸான் என்பரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
புத்தளம் நிந்தனியில் பொதுமக்களால் வரவவேற்கப்பட்ட என்.எல்.எம். நப்ஸான், ஊர்வலமாக புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக அமைந்துள்ள மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
லெகூன் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இல்ஹாம் தலைமையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் நகர சபை செயலாளர் கீத்தானி ப்ரீதிக்கா, ஐ.மீடியா பணிப்பாளர் கவிஞர் மரைக்கார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சாதனையை நிலைநாட்டிய நப்ஸானுக்கு அதிதிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.
தொடர்ந்து நப்ஸான் அவர்கள் புத்தளம் மற்றும் தில்லையடி பிரதேசங்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சாதனை படைத்த நப்ஸானுக்கான பாதுகாப்பு விடயங்களை இலங்கை முழுவதிலும் பாதுகாப்புதுறையினர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாதுகாப்புதுறையினருக்கு லெகூன் அமைப்பு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago