Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர் என ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், கல்லடி பிரதேசத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக பொலநறுவ, பகமூன பகுதியிலிருந்து வருகை தந்த சிலர் பயணித்த வான் ஒன்றே, இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி பிரதேசத்தில் இருந்து பகமூன பகுதியை நோக்கிச் சென்ற வான், ஆனமடுவ நகரை அண்மித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்த்திசையில் வந்த டிமோ பட்டா லொறியொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதையடுத்து, இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த வான் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள சிறிய பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது வானில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் 4 பேர் மட்டுமே காயமடைந்துள்ளனர் எனவும் ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago