2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

அலி சப்ரி ரஹீம் எம்.பி வாக்கு வாதம்

Editorial   / 2024 மே 27 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 எம்.யூ.எம் சனூன்

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற உப்பு உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான காணிகளை கபளீகரம் செய்ய துடிக்கும் தரகர்களுக்கு  எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் களம் இறங்கியுள்ளார்.

புத்தளம் மன்னார் வீதி காணிகள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் மற்றும் அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் விளைவாக பல சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 

அவற்றை ஜீரணித்துக்கொள்ள முடியாத சில சமூகவிரோத சக்திகள் கடந்த பல தினங்களாக கிழக்கரை காணிகள் அமைந்திருக்கும் இடங்களில் குழப்ப நிலையை உருவாக்குவதற்கு  பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

காணி உரிமையாளர்களை மிரட்டுதல், ஊழியர்களை காணிகளிலிருந்து விரட்டியடித்தல் போன்ற பல்வேறு அராஜகங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காணி தரகர்களுடன் பிரதேச செயலாளர் குறித்த இடத்திற்கு வருகை தந்தமை தவறு என்று குறிப்பிடும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இது தொடர்பாக குறித்த குழுக்களுடன் இணைந்து அரச மட்டத்தில் இதனை நன்கு ஆராய்ந்து உரியவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும்  வலியுறுத்தி கூறினார்.

இந்நிலையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை சிலர் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த இடத்திற்கு  கடந்த 26ஆம் திகதி 26ஆம் திகதி பிற்பகல் சென்ற  தன்னை, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அச்சுறுத்தியதாக  புத்தளம் பிரதேச செயலாளர்  சம்பத் வீரசேகர  மேலதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X