Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், ஜூட் சமந்த
நாட்டில் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால்,புத்தளம் மாவட்டத்திலுள்ள, எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புத்தளம், நவகத்தேகம, கருவலகஸ்வெவ, வண்ணாத்திவில்லு, கற்பிட்டி, ஆனமடு, முந்தல், பள்ளம ஆகிய பிரிவுகளில் வசிக்கும் 1,777 குடும்பங்களைச் சேர்ந்த 6,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், 1,184 குடும்பங்களைச் சேர்ந்த 4,268 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரவிக்கப்படுகிறது.
இதேவேளை, வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 தற்காலிக முகாம்களில், 310 குடும்பங்களைச் சேர்ந்த 1,183 பேரும் , நவகத்தேகம பிரதேசத்தில் அமைக்கப்படடுள்ள 2 தற்காலிக முகாம்களில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 730 பேரும், புத்தளம் பிரதேசத்தில் 6 தற்காலிக முகாம்களில் 551 குடும்பங்களைச் சேர்ந்த 2,080 பேரும், தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஆனமடு பிரதேசத்தில் ஒரு தற்காலிக முகாமில் 25 குடுபங்களைச் சேர்ந்த 72 பேரும், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் ஒரு தற்காலிக முகாமில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான சமைத்த உணவு , குடிநீர், மருத்துவ வசதிகள் என்பவற்றை, அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக வழங்கி வருவதாக, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தெதுருஒயா, ராஜாங்கனை, தம்போவ, இங்கினிமிட்டிய, அஹங்கம ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளனவென, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தம்போவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அதன் 6 வான் கதவுகளும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 16 வான் கதவுகளும், தெதுருஒயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும், அஹங்கம நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று. புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் எச்.எல்.சீ புஷ்பகுமார தெரிவித்தார்.
இதனால், நீர்த்தேக்கங்களை அண்மித்து வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு, அவர் கேட்டுக்கொண்டார.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago