2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நடும் நிகழ்வு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 02 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் போது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஆனமடு பிரதேசத்தைச் சேர்ந்த படைவீரர் நீரோவின் ஞாபகார்த்தமாக, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் நிர்மாணிக்கப்படவுள்ள 34 வீடுகளைக் கொண்ட “படைவீரர் நீரோகம” எனும் வீடமைப்புக் கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, சனிக்கிழமை இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் அழைப்பின் பேரில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இந்த வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். 

இந்த வீடமைப்புத் திட்டத்தை, 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதியளவில் நிறைவு செய்து, பயனாளர்களிடம் கையளிக்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி, அசோக பிரியந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களோடு, வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X