2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

அக்கா, தங்கையின் நிர்வாணப்படம்: சிப்பாய் சிக்கினார்

Editorial   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ சிப்பாய், அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு, இவ்விருவரின் நிர்வாணப் புகைப்படங்களை ​ தனது வாட்ஸ்அப் மூலம் தனது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். அதனை தவிர்ப்பதற்காக    மூத்த சகோதரியிடமிருந்து 50,000 ரூபாவை வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டார்.

அவ்வாறு அச்சுறுத்திய இராணுவ சிப்பாய், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால்   கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வடக்கில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதானவர் என்றும் அவர் குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

16 வயது பள்ளி மாணவி, இராணுவ வீரரின் முகநூல் பக்கத்தின் மூலம் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார், ஆனால் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்று விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார்   தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .