Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் மற்றும் அண்டிய கிராமங்களில் வதியும் பொதுமக்களுக்கு புத்தளம் நகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீமினால் இலவசமாக மரக்கறி வகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவின் தாக்கத்தினால் புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு தொடராக பிறப்பிக்கப்பட்டுள்ளதால,; தமது வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்கும் பொருட்டே, இவ்வாறு மரக்கறிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
புத்தளத்தின் சகல கிராம சேவையாளர் பிரிவுகளில் வதியும், குறிப்பாக புத்தளத்தில் கொரோனாவினால் முடக்கப்பட்டுள்ள கடையாக்குளம் பிரதேச மக்களுக்கு வீடு வீடாக சென்று மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 300 ஷரூபா பெறுமதி வாய்ந்த மரக்கறி பொதிகளே இவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றன.
இன மதங்கள் பாராது சுமார் 40 ஆயிரம் குடும்பத்தினருக்கு இவ்வாறு மரக்கறிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக தெரிவித்த நகர சபை உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம், பசியால் பரிதவித்துக்கொண்டிருக்கும் நகரின் அண்டைய கிராமங்களில் வதியும் மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago