2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

21 இளநீகளைப் பார்த்த பெண் மரணம்

Editorial   / 2023 ஜூன் 18 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

21 இளநீர் காய்களைப் பார்த்த 48 வயதான பெண்ணொருவர் மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாஸ்கிரிய எனுமிடத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், வெள்ளிக்கிழமை (16) மாலை முதல், சனிக்கிழமை விடியற்காலை வரையிலும் விசேட பூ​ஜைகள் (சாந்தி கர்ம) நடத்தப்பட்டுள்ளன.

சுகயீனமடைந்த நிலையில் இருந்த பெண்கள் இருவர் மற்றும் ஆண்ணொருவருக்கே இவ்வாறு பூஜைகள் செய்யப்பட்டன.  பூஜைகளை செய்துகொண்டிருந்த நபர், அவ்வப்​போது அந்த மூவருக்கும் 21 இளநீர் காய்களைக் காண்பித்து தொட்டு கும்பிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அம்மூவரும் அவ்வாறே செய்தும் உள்ளனர்.

21 இளநீர் காய்களைக் காண்பித்துக் கொண்டிருந்த போது, அதிலொரு பெண் திடீரென சுகயீனமடைந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு மஞ்சள் நீரை பருகக் கொடுத்துள்ளனர். எனினும், சுகமடையவில்லை. இதனையடுத்து வைத்தியசாலைக்குச் கொண்டுச் சென்றுள்ளார். அங்கு அப்பெண் மரணமடைந்துவிட்டார்.

இந்த பூஜை வழிபாடுகளைச் செய்ததாகக் கூறப்படும் கல்கிரியாகமவைச் சேர்ந்த 25 வயதான நபர் பொலிஸாரினால் ​கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .