Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Editorial / 2023 மே 26 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
1,200 ரூபாய் பெறுமதியான 20 தேங்காய்களை திருடிய ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய வேலைகளுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டை விதித்துள்ளது.
திவுலபிட்டிய, கெஹேல்எல்ல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்தே 20 தேங்காங்களை அந்நபர் திருடியுள்ளார்.
தென்னந்தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் தேங்காய்களை பறித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டன. அதில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட மேற்படி நபரை இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை மினுவாங்கொட நீதவான் விதித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் அந்தக் குற்றங்களை தான் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். எனினும், கைவிரல் அடையாளங்களின் பிரகாரம் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அதனப்படையிலேயே ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட திவுலுப்பிட்டியவைச் சேர்ந்த அந்த நபர், 2021 ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago