2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

19/19 மனைவி மாயம்: 28/28 கணவன் முறைப்பாடு

Editorial   / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய இளம் மனைவியை காணவில்லை என, அவளுடைய இளம் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை புத்தல யுதஹாநாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

தன்னுடைய 19 வயதான மனைவியே செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் காணவில்லை என அப்பெண்ணின் கணவனான 28 வயதான நபர், செப்டெம்பர் 28ஆம் திகதியன்று முறைப்பாடு செய்துள்ளார். 

வீட்டிலிருந்து வெளியே சென்று மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது,  மனைவி வீட்டில் இருக்கவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி பார்த்தபோதும் அங்கும் அவர் இருக்கவில்லை என்று தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய மனைவி 19ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தாலும், வீட்டுக்குத் திரும்புவாள் என 28 ஆம் திகதி வரையிலும் காத்திருந்ததாக அவர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .