Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மே 16 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக் கேணியில் ஆண் ஒருவரது கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்த நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெற்றிலைக் கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த 10ஆம் திகதி கிடைந்த தகவலையடுத்து குறித்த இடத்தை மருதங்கேணி பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்கும் கொண்டுவந்தனர்.
நீதிமன்ற உத்தரவை பெற்று, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி இஸ்மையில் ஜெமில் மேற்பார்வையில், குறித்த இடத்தை மறுநாள் (11) தோண்டிய போது, இரு பிள்ளைகளின் தந்தையான இராசன் சிவஞானம் என்பவரது சடலம் மீட்கப்பட்டது.
இவ் விடுதலைப் புலிகளின் சிறைக் கைதிகளுக்கான பொறுப்பாளராக கடமையாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், சட்டதரணியுடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் 12ஆம் திகதி சரணடைந்திருந்தார். சந்தேகநபர், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக மேற்படி கொலை இடம்பெற்றுள்ளமை சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபர், கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
57 minute ago
1 hours ago