2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வீட்டுக்குள் புகுந்தவருக்கு முறையான கவனிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி வடக்கு, கந்தசுவாமி ஆலய தெற்கு வீதியில் உள்ள வீட்டுக்குள்  திருட முற்பட்ட நபர், கையும்மெய்யுமாகப் பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டார். இந்த சம்பவம் நேற்று (03) இரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கணவனும் மனைவியும்  சாப்பிட்டுவிட்டு உறங்குவதற்கு தயாராக இருந்த நேரம், கதவுகளை பூட்ட சென்றுள்ளனர். இதன்போது இரண்டு திருடர்கள் பின்பக்க வாசலூடாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதனை அவதானித்த பெண், குறித்த நபரை கையும் முடியுமாகப் பிடித்து கணவரிடம் கொடுத்துள்ளார். 

பின்னர் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, குறித்த இளைஞனை  முறையாகக் கவனித்தனர்.  குறித்த நபருடன் வந்த மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளார்.  இவர் குடும்பஸ்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அச்சுவேலி பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, திருட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

இதேவேளை, புத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் 10 கோழிகளை திருடிய 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு நேரம் கோழிப்பண்ணைக்குள் நுழைந்து திருட்டு நபர், கோழிகளை திருடுவதை அவதானித்த பெண், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .