2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விவசாய குளத்தில் மிதந்த சடலம்

Freelancer   / 2023 பெப்ரவரி 25 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தீருவில் பகுதியில் உள்ள விவசாய குளத்துக்குள் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் மெலிஞ்சிமுனை ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 51) என பொலிஸார் தெரிவித்தனர்.

காலை குறித்த பகுதியூடாக சென்ற விவசாயிகள், குளத்தில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

தல விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட பொழுது துவிச்சக்கர வண்டி ஒன்றும் குளத்துக்குள் இருந்தமை தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .