Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூன் 03 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியொன்றை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியின் டாஸ்போட்டில் வைத்து, பூட்டப்பட்ட 1,90000 ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த மர்ம நபரொருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார் .
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் கண்காணிப்பு கேமராவின் காணொளியை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் மானிப்பாய் சாவல்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேக நபர் தொலைபேசியை
30,000 ரூபாய் பணத்திற்கு ஆறுகால்மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது .
பின்னர் கையடக்கத் தொலைபேசியை வாங்கியவரும் கைது செய்து தொலைபேசி மீட்கப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியை திருடிய நபர் சைக்கிள் திருட்டுகளில் ஆறுமாதகாலம் தண்டனை பெற்று விடுதலையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .