2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (21) இடம்பெற்றது.

இதன்போது தேர்தல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் தலைமையில் இக் கலந்துரையாடல்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேர்தல் ஆணையாளர் நாயகம், யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .