Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Simrith / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த , குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசேட தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்து சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதற்கான முடிவுத் திகதி கடந்த 21 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மாணவர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து 30.10.2023 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பதிவாளர் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025