2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகள் இல்லை

Princiya Dixci   / 2022 மே 10 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏஆர்வி மற்றும் ஏஆர்எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏஆர்வி மருந்துகள் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் குறிப்பிட்டளவு உள்ள போதும் ஏஆர்எஸ் தடுப்பூசி மருந்துகள் இல்லை என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நாய்களைக் கண்டால் விலகிச் செல்லுங்கள். நாய்க்கடிக்கு உள்ளாகினால் விலங்கு விசர் நோய் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டினால் உயிர்ளைக் காப்பாற்ற முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்க்கடிக்கு உள்ளாகியவர்களுக்கு ஏஆர்பி மற்றும் ஏஆர்எஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாவிடின், நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகி, உயிரிழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .