2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாள்வெட்டு சம்பவம்; இருவருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2023 மார்ச் 08 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி நகரப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம், நேற்று (07) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், பாரதி வீதி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த இளைஞன் மீது வாளால் வெட்டி தப்பிச் சென்றிருந்தனர்.

இதன்போது சுபதீபன் (வயது 21) என்ற இளைஞன் காயங்களுக்கு உள்ளாகி, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குட்டியபுலம், வயாவிளான் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரை கைது செய்திருந்தனர்.

அவர்களை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க, நீதவான் உத்தரவிட்டதாக அச்சுவெலி பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .