2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாள், கோடரியுடன் நடந்து சென்ற இளைஞன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 02 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்று இரவு இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் கட்டுடை பகுதிக்கு விரைந்த பொழுது வாள் மற்றும் கைக்கோடரியுடன் நடந்து சென்ற நபரையே பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த நபர் வன்முறை செயலுக்காக இவ்வாறு சென்றிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளயிட்டுள்ள நிலையில் குறித்த 29 வயதான இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X