2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வாய் மற்றும் மூக்கில் இரத்தம் வடிந்து குழந்தை பலி

Freelancer   / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழப்பாணம் - அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தில், பிறந்து 42 நாட்களேயான ராயதீபன் டேனுயன் என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தையை நேற்று (15) அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தை வாயால் மூக்கால் இரத்தம் வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .