2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வவுனியாவில் 6 கைதிகள் விடுதலை

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 25 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்


நத்தார் தினத்தையொட்டி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் இன்று  (25)  விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ​பொது மன்னிப்பின் கீழ், நாடாளாவிய ரீதியில் 309 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அறுவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற சிறு குற்றங்களுக்காக  இவர்கள்  தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


வவுனியா  சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி, கைலாகு கொடுத்து அவர்களை விடுவித்து வழி அனுப்பி வைத்தனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .