2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், எழு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று (21) மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ஆதரவாக 11 வாக்குகளும்  எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ். மாநகர சபையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் இரண்டு உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஓர் உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .